ண்டிகர் மாநிலத்தில் புதிய மதுக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 1ந்தேதி முதல் புதிய மதுக்கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி மதுபானங்களின் விலை 25 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது.

சண்டிகர் மாநிலத்தில் கடந்த 20ந்தேதி வெளியிடப்பட்ட புதிய மதுக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் மது அருந்துவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கபடுகிறது.

இந்த புதிய மதுக்கொள்கை வரும்  ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி 2018-19ஆம் ஆண்டில், வருடாந்திர மதுக்கடை  உரிமம் கட்டணம் 6 லட்ச ரூபாயிலிருந்து 7.50 லட்சம்  ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல மதுவுக்கான ஆண்டு வரி  25 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது. மேலும் மதிப்பீட்டு வரி, கலால் வரி   10 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இந்திய தயாரிப்பான வெளிநாட்டு மது (IMFL) ஆகியவற்றின் விலையை 15% அதிகரித்துள்ளது. ஆனால் மது மற்றும் பீர் விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய மதுக்கொள்கை காரணமாக,   ரூ.165க்கு விற்பனையாகும் 330 மில்லி  மது பாட்டில் இனிமேல் 200 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

 

சண்டிகரில், சுமார் 125 மது பார்கள் உள்ளதாகவும், மதுபானத்திற்கான வரிகளை அரசு அதிக அளவில் உயர்த்தி உள்ளதால், மது விரும்பிகள் , இனிமேல்  சண்டிகர் ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் மது அருந்து வதற்கு  அதிக அளவு பணம் செலுத்தவேண்டிய  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மதுபான விற்பனை கடைகளின் ஏலம்  அதிக பட்சமாக செக்டார் 30 பகுதியான மார்க்கெட் பகுதியில் ரூ.5.51 கோடி வரை ஏலம் போனதாகவும், செக்டர் 42 தனாஸ் காலனி  பகுதியில் 5 கோடி ரூபாய் வரை ஏலம் போனதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சண்டிகர் மாநில விருந்தோம்பல் சங்க தலைவர்,  அங்கிட் குப்தா கூறுகையில், மதுபானங்களுக்கு கலால் வரி துறையினர் 3 வகையில் வரி விகிதங்களை அதிகரித்து உள்ளனர். இதன் காரணமாக மது பானங்களில் விலை அதிக அளவு உயரும் என்றும்,  இந்த வரி உயர்வு அனைத்தும்  வாடிக்கையாளர்களின் தலையிலேயே விழும் என்று கூறி உள்ளார்.

சண்டிகர் அரசு இந்த ஆண்டு   93 மதுபானம் வினியோகிப்பதற்காக கடைகளுக்கு  எக்ஸ்சேஸ் டிபார்ட்மென்ட் ஏலம் விடுத்துள்ளது.  ஆனால்,  கடந்த 2017-18ம் ஆண்டின்போது 77 கடைகளுக்கு மட்டுமே ஏலத்தில் விடுத்துள்ளதும.  தற்போது 93 மதுபான கடைகளுக்கு ஏலம் அறிவித்திருப்பது நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிரான என்று குற்றம் சாட்டி உள்ளார்.