சதுரகிரி

பௌர்ணமியை சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 24 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

சதுரகிரி கோவிலில் பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக வரும் 24 ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

”சதுரகிரி கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் இறங்கிக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் இரவில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.  மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்படும்” 

என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.