2021முதல் 2குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது! அசாம் அரசு அதிரடி

Must read

திஸ்புர்:

சாம் மாநிலத்தில்   இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலைகள் இல்லை என்றும், இந்த புதிய திட்டம் 2021ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த 2001-ம் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2 கோடியே 66 லட்சபேர் இருந்தனர். இது கடந்த 10 ஆண்டுகளில் பண்மடங்கு பெருகி உள்ளது. அசாமின் மக்கள் தொகை 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் மாநில அரசு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது .

ஏற்கனவே கடந்த  செப்டம்பர் 2017ம் ஆண்டு, அசாம் சட்டமன்றம் ‘அசாமின் மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் கொள்கையை’ நிறைவேற்றியது. அதன்படி, 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களு அரசு வேலை கிடையாது என்றும் உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ கிடைக்காது என தெரிவித்துள்ளது. மேலும்,  இரண்டு குழந்தைகளைக் கொண்டவர்கள் மட்டுமே அரசு வேலைக்கு தகுதியுடையவர்கள் என்றும், தற்போதுள்ள அரசு ஊழியர்களும் இரு குழந்தைகளின் குடும்ப விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த வயதுக்கு முன்னதாக திருமணம் செய்பவர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலின் தலைமையில்  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது. வரும் 2021ம் ஆண்டு முதல் கண்டிப்பாக புதிய மக்கள் தொகை கொள்கையை அமல்படுத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.

மேலும், புதிய நிலக் கொள்கை தொடர்பான முடிவும் எடுக்கப்பட்ட உள்ளது. அதன்படி, நிலமற்ற பூர்வீக மக்களுக்கு மூன்று பெரிய விவசாய நிலங்களையும், வீடு கட்டுவதற்கு வழங்கும் என கூறப்பட்டு உள்ளது.

அத்துடன் மாநிலத்தின் பேருந்து கட்டணத்தை 25 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

More articles

Latest article