முதன்முதலாகத் தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங். ‘பிரண்ட்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர்.
Seantoaa Films மற்றும் Cinemass Studio இணைந்து தயாரிக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த லாஸ்லியா ஹர்பஜன் சிங் உடன் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
பிரண்ட்ஷிப் படத்தின் டீசரில் செம ஸ்டைலிஷான லாஸ்லியா, சீரியஸான ஹர்பஜன் சிங், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தோன்றுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் செம ரகளையான டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது, இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து லாஸ்லியாவும் பாடியுள்ளார்.