மும்பை

ச் டி எஃப் சி வங்கி தலைவர் ஆதித்யா  பூரி  வங்கி நடவடிக்கைகளுக்கும் நட்புக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

தனியார் வங்கிகளில் லாபம் ஈட்டும் வங்கிகளில் ஒன்றான எச் டி எஃப் சி வங்கி கடந்த மார்ச் வரை முடிந்த காலாண்டில் தனது நிகர வருமானத்தில் 23% லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.   இந்த வங்கியின் வாரக்கடன் 1.36% ஆக உள்ளது.  மொத்த வங்கிகளின் சராசரி வாராக்கடன் 10% ஆக உள்ளது.   நாட்டை விட்டு ஓடிச் சென்ற விஜய் மல்லையாவுக்கு இந்த வங்கி கடன் அளிக்க மறுத்துள்ளது.

இந்த வங்கியின் தலைவர் ஆதித்யா பூரி, “ஒரு வங்கி தலைவர் தனது நண்பர்களுக்கு காபி அளித்து உபசரிக்க முடியும்.  அதை விட வேறு என்ன செய்ய முடியும்?  அதனால் எனது சக ஊழியர் பரேஷ் சுல்தான்கர் விஜய் மல்லையாவுக்கு கடன் அளிக்க மறுத்தார்.    என்னிடம் விஜய் மல்லையா வந்து கடன் கேட்ட போது நான் பரிசீலிக்க எண்ணினேன்.  ஆனால் பரேஷ் அதை மறுத்து விட்டார்.

ஒவ்வொரு முறை பேசும் போது மல்லையா தனது இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அளவுக்கு என்னை திட்டுவார்.  நட்பு வேறு வங்கி நடவடிக்கை வேறு என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.   இவ்வாறு உறுதியாக இருப்பது எவ்விதத்திலும் கடன் கேட்பவரை ஏமாற்றும் நடவடிக்கை இல்லை என்பதையும் நட்புக்கு வங்கி நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இல்லை என்பதையும் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.