புதுடெல்லி: தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு(UGC) ஆகியவை இணைக்கப்பட்ட பின்னர், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களின் புதிய பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அத்தகைய கல்வி நிறுவனங்கள் ஓராண்டிற்குள் மூடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பட்டியல் தயார் செய்யப்பட்ட பின்னர், மாணாக்கர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கான மானியக் கவுன்சில்(HEGC) இதற்கு பொறுப்பேற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“வேறொரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மாணாக்கர்கள் சேர்வதை உறுதிசெய்யும் வகையில் அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். போதுமான அனுமதி வரைமுறைகள் இல்லாமல் செயல்பட்டுவரும் கல்வி நிறுவனங்களின் மீது விதிக்கப்படுவதற்கான அபராத தொகை நிர்ணயப் பணி றடைபெற்று வருகிறது” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.