பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, சாம்பியன் பட்டம் வென்றது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா-குரேஷியாவின் இவான் டோடிக் இணையை, இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்ஹிங் இணை எதிர்கொண்டது.
துவக்கத்தில் இருந்தே இரு இணைகளும் சமபலத்துடன் புள்ளிகளை குவித்து வந்தன. முதல் செட்டை சானியா இணை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் பயஸ் இணை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைபற்றி ஆட்டத்தை சமன்படுத்தியது.
ஆகவே டைப்பிரேக்கர் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 10 கேம்களை முதலில் கைப்பற்றிய பயஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த ஆண்டு நழுவவிட்ட பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இந்த ஆண்டு லியாண்டர் பயஸ் – மார்டினா ஹிங்கிஸ் இணை கைப்பற்றியுள்ளது.
பயஸ் வெல்லும் 10 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.