மணிலா,
பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘மிஸ்யுனிவர்ஸ்’ என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது.
இந்த பிரபஞ்ச அழகி போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கான பல சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.
அதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் மிட்டனெரே (24) பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். பல்மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவி ஆவார்.
இவருக்கு அடுத்த படியாக 2-வது இடம் கெய்தி நாட்டை சேர்ந்த ரகீல் பெலிசியருக்கு கிடைத்தது. 3வது இடம் கொலம்பியாவை சேர்ந்த ஆண்ட்ரியா தோவர் என்பவருக்கு கிடைத்தது.
இறுதிபோட்டியில், நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு, ஐரிஷ் அளித்து பதில், “அகதிகளுக்கு பிரான்ஸ் வரவேற்பு அளித்து எல்லைகளை திறந்து விட்டது. உலக மயமாக்குதலை பிரான்ஸ் மக்களாகிய நாங்கள் விரும்புகிறோம். சர்வதேச நாடுகளை சேர்ந்த மக்களை நாங்கள் விரும்புகிறோம்” என பதில் அளித்தார்.
மேலுரும், பிரபஞ்ச அழகி பட்டத்தை பல் மற்றும் வாய் நலம் பேணுதல் பிரசாரத்துக்கு பயன்படுத்த போவதாக கூறினார்.
இந்த அழகி போட்டியில் முதல் 13 இடங்களை இந்தோனேசியா, மெக்சிகோ, பெரு, பனாமா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் பிடித்தனர்.
இந்தியா இறுதிசுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.