டெல்லி: பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி, narendramodi_in என்ற பெயரில், தனிப்பட்ட டிவிட்டர் கணக்கை தொடங்கி நடத்தி வந்தார். இநத டிவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.
பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை டிவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கை முடக்கியவர்கள், அவரை பின்தொடர்பவர்கள், கிரிப்டோகரன்சி மூலம் பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜான் விக் என்ற ஹேக்கர் குழு மோடியின் கணக்கை ஹேக் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த குழுவினர், கிரிப்டோகரன்சி மூலம் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பின்தொடர்பவர்களைக் கேட்டு தொடர்ச்சியான டிவீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
“நாங்கள் நிலைமையை தீவிரமாக விசாரித்து வருகிறோம். இந்த நேரத்தில், கூடுதல் கணக்குகள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரியாது, என்று டிவிட்டர் செய்தித்தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.