சென்னை:
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக இலவச வைஃபை வசதி செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.இந்த வசதி மார்ச் மாதம் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறி உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பல இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிக கட்டணம் காரணமாக எதிர்பார்த்த அளவு பயணிகள் கூட்டம் இல்லை. பயணிகளின் வருகை அதிகரிக்க, ரயில் நிலையத்தில் இருந்து சில பகுதிகளுக்கு வேன் வசதி மற்றும், வாடகை சைக்கிள் மற்றும் வாடகை ஸ்கூட்டர் போன்ற பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.
இந்த நிலையில், தற்போது இலவச வைபை வசதி ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைபை வசதி மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலவச வைபை வசதியை பெற அதற்குரிய மெட்ரோ ‘ஆப்’ என்ற செயலியை பயணிகள் தங்களது போன்களில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டாஸ் செய்ய வேண்டியது அவசியம்.
இன்றைய நவீன யுகத்தில் செல்போனும் இன்டர்நெட் வசதியும் அத்தியாவசமாகியுள்ள நிலையில், மக்கள் அதிக அளவில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் நோக்கில் இந்த வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.