சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் எடுத்தவர்கள், அந்த டிக்கெட்டுகளை காண்பித்து, சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதுபோல ஐபிஎல் டிக்கெட்டை காண்பித்து அன்றைய தினம் சேப்பாக்த்துக்கு மாநகர பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025க்கான ரசிகர்களின் வசதியை மேம்படுத்துவதற்காக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மற்றும் பெருநகர போக்குவரத்துக் கழகம் (MTC) ஆகியவற்றுடன் சிறப்பு கூட்டாண்மைகளை  அறிவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற,  ஐபிஎல் 2025  இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கு கிறது. இதைத்தொடர்ந்து, முதல்போட்டியும் அங்கு நடைபெற உள்ளது.

முதல் போட்டியானது,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டி  இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.  நடப்பாண்டு, ஐபிஎல் போட்டிகளின் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளது.  அதற்கான டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல்  போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுபோல, 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியைக் காண வரும் ரசிகர்கள், போட்டி டிக்கெட்டை வைத்து மாநகர பேருந்துகளில் (non AC) இலவசமாக பயணிக்கலாம்.போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே பயணம் செய்யலாம் -சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 23, 2025 ஆம் தேதி நடைபெற உள்ள “IPL 2025” கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.

IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டி விவரங்கள்:

  1. மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ்
  2. மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு
  3. ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி
  4. ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா
  5. ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத் 
  6. ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப்
  7. மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான்