சென்னை:

மிழகத்தில் அரசு மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி ஜனவரி 5 ஆம் தேதி தொடக்ககும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், மருத்துவப்படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு, ஜேஇஇ போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோச்சிங் கொடுத்து வருகிறது. இதற்கான தமிழகம் முழுவதும்  412 பயிற்சி மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைத்துள்ளது.

இந்த பயிற்சி மையங்களில் நாளை முதல், மாணவ மாணவிகளுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது அதன்படி, வாரத்தில் 5 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடக்கும். பயிற்சி நேரம், காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரையிலும், பிற்பகலில், 1.10 மணி முதல் 4.20 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் கோச்சிங் தொடங்கப்பட்ட நிலையில், இடையில் அரையாண்டு தேர்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை முதல் (ஜனவரி 5ந்தேதி) மீண்டும் நீட் கோச்சிங் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு, அரசின் கீழ் பயிற்சி பெற்ற 42 ஆயிரம் மாணவர்களில் 7 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக்  கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதனால், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்கள் மூலமாகவே மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சிக்கு ஏற்கனவே   மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களில் 320 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.