திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளுக்கு இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரிலும் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த முடிவை டி.டி.டி. எடுத்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு பல்வேறு மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், மாநிலத்தின் தலைநகரில் இலவச நிலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வது அதிகரித்து வருவதை காரணம் காட்டி நாட்டின் முக்கியமான இடங்களில் ஸ்ரீவாரி கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என்று பி.ஆர். நாயுடு கூறியுள்ளார்.

“இந்த கோயில் ஒரு மத மையம் மட்டுமல்ல, சமூகம் மற்றும் மத சுற்றுலாவின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும். அதன் மூலம், நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று TTD தலைவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.