திருப்பதி:

திருமலையில், நாளை (பிப்., 13)   மூத்த குடிமக்களும், அதற்கு அடுத்த நாள், கைக்குழந்தைகளின் பெற்றோரும், இலவச தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு, மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி,  நாளை (பிப் 13)  மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட  இருக்கிறது.

காலை, 10:00 மணிக்கு, 1,000 பேர், பகல், 2:00 மணிக்கு, 2,000 பேர், மாலை, 3:00 மணிக்கு, 1,000 பேர் என, 4,000 பேர் இலவசமாக  தரிசனம் செய்யலாம்.

இதற்கான டோக்கன்களை, திருமலையில் அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல்  நாளை மறுநாள் (பிப்.14) 9:00 மணி முதல், மதியம், 1:30 மணி வரை, 0 – -5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.