டெல்லி: மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி இருப்பதாவது: தடுப்பூசி வாங்கும் முயற்சியில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. அதற்காக 1.34 கோடி தடுப்பூசிகளுக்கு நிர்வாகம் அனுமதி தந்துள்ளது.
தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் விலையைக் குறைக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. மனித குலத்திற்கு உதவ வேண்டிய நேரம், லாபம் ஈட்டக்கூடாது என்று கூறியுள்ளார்.