சென்னை : டி.என்.பி.எஸ்.சி.  அறிவித்துள்ள குரூப் 2, 2-ஏ தேர்விற்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2A தேர்வு 2024-25க்கான அறிவிப்பை 20 ஜூன் 2024 அன்று பொதுவில் வெளியிடப்பட்டது, அதன்படி அரசு பணியில் காலியாக 2327 காலியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிகிகப்பட்டது. அதன்படி, தேர்வுகள் 14 செப்டம்பர் 2024 அன்று மாநிலம் முழுவதும் ஆஃப்லைன் பயன்முறையில் 03 மணிநேர தேர்வு நேரத்துடன் ஆஃப்லைன் முறையில் பிரிலிம்கள் நடைபெறும், இதில் பல்வேறு பிரிவுகளில் இருந்து மொத்தம் 200 MCQகள் 1.5 மதிப்பெண்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் – 2 -விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப்-2ஏ -விற்கு ஆயிரத்து 820 பணியிடங்களும் என மொத்தமாக 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது.

குரூப்-2, 2-ஏ-விற்கான முதல் நிலைத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கிண்டியில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அலுவலக வேலைநாட்களில் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.