நெட்டிசன்: வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டரில் வரும் பதிவுகளுக்கான பகுதி.
“அதிர்ஷ்ட குலுக்கலில் உங்க போன் நம்பருக்கு நூறு ரூபா டாப் அப் கிடைச்சிருக்கு” என்பதில் ஆரம்பித்து, “உங்க நம்பருக்கு பத்து கோடி அமெரிக்க டாலர் கிடைச்சிருக்கு” என்பவது வரை ஏகப்பட்ட கில்மா போன் கால்கள் வருவதுண்டு. பெரும்பாலும் பெண் குரல்கள்தான்.
அப்படி, “அழகு”(!) பெண் குரலில் வந்த போன் கால் பதிவு, வாட்ஸ்அப்பில் உலவுகிறது. கிளைமாக்ஸ்தான் அதிர வைக்கிறது!
03-1420281234-anonymous-phone-call4566-600
“ஹலோ….!”
“சொல்லுங்க…!”
“வேலூர் மாவட்டத்தில இருந்து ஸ்ரீசாய் கம்பெனியிலிருந்து போன் பண்றோம் சார்..!”
“என்ன கம்பெனி..?”
”வேலூர் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீ சாய் கம்பெனியிலிருந்து போன் பண்றோம் சார்..!”
”சரி..!”
”இந்த மொபைல் நம்பருக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நாலு பொருள் செலக்ட் ஆகியிருக்கு..!”
”சரி..!”
”இது உங்களோட நம்பரா..?”
“அது ஏன் செலக்ட் ஆவுது..?”
”ம்…?”
“அது ஏன் என் நம்பர் செலக்ட் ஆவுது?“
”இது கம்பெனியோட விளம்பரத்துக்காக… நெட்லேருந்து நம்பர் எடுத்து…  30 நம்பர் செலக்ட் பண்ணியிருக்காங்க சார்..!”
”நீங்க அப்படி எடுக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியுமா..?”
“ம்..”
“என் மொபைல் நம்பர நெட்டுல இருந்தோ வேற வழியிலோ என்னோட அனுமதி இல்லாம எடுக்கக்கூடாதுனு சட்டம் இருக்கு!”
“அதெல்லாம் எடுத்துட்டோம்.. உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க.. “
“டெலிகராம் ஆக்ட்படி என் நம்பரை நீங்க எடுக்க ரைட் கிடையாது..”
“சரி, நீ வையி..! காலையிலே மெண்டல் மாதிரி பேசற.. மெண்டலு! வேணுமா.. டீட்டெய்ல்ஸ் கேட்கிறதுன்னா கேளு,  இல்லே.. வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லு. எரும மாதிரி பேசுற…  பன்னி மாதிரி..!  வையி.. சாவுகிராக்கி.! சுதந்திர தினத்தன்னைக்கு எல்லாரையம் சுட்டுக்கொன்னாங்கள்ல உன்னை சுட்டுக்கொன்னிருக்கனும்டா.!. வைடா.. புறம்போக்கு!”
# இது எப்படி இருக்கு?
அந்த ஆடியோ…
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/08/WhatsApp-Audio-2016-08-26-at-10.21.05-AM.mp4[/KGVID]