பாரிஸ் :
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க பிரான்ஸ் போராடி வருவதாக அதன் உயர் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் திங்களன்று தெரிவித்தார், இதனால் அரசு அதிகாரிகள் பல்வேறு தடை உத்தரவை செயல்படுத்தலாம் என்று கருதுகின்றனர். கொரோனா வைரஸால் பிரான்சில் பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது மற்றும் 5,400 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாரிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியேறவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு, நாடு முழுவதும் உள்ள பார்கள் மற்றும் உணவகங்களை அரசாங்கம் மூட உத்தரவிட்டபோதிலும், பாரிஸ் நகர வாசிகள் பெருமளவில் வீட்டிலிருந்து வெளியேறினர் என்று சாலமன் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நிறைய பேர் புரிந்து கொள்ளவில்லை, மேலும் மக்கள் தங்களின் அறிவுரையை ஏற்காதது தொற்றுநோய் பரவாமல் தடுப்பதில் நாங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்றால் எண்ணத்தோன்றுகிறது, என்று சாலமன் பிரான்ஸ் கூறினார்.
மக்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதில் அரசு எடுக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தி பேரழிவு தரும் என்றும் அனைத்து பிரெஞ்சு மக்களையும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அணிதிரளுமாறும் கேட்டுக்கொண்டார்.