சென்னை: பாக்ஸ்கான் நிறுவனம். தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை சென்னை அருகே அமைத்து உலக நாடுகளுக்கு ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம் 2024-25 நிதியாண்டில் இந்தியாவில் தனது வருவாயை இரட்டிப்பாக்கி சுமார் ரூ.1.7 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தனது யூழான் டெக்னாலஜி நிறுவனத்தில் ரூ.12 ஆயிரத்து 800 கோடியை முதலீடு செய்து உள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழகம் மற்றும் ஆந்திராவில் இயங்கி வரும் பாக்ஸ்கான் நிறுவனம், ஐபோன் தயாரிப்புக்காக பிரத்யேகமாக கர்நாடகாவில் தற்போது ஒரு ஆலையை அமைத்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில் தொழிற்சாலை மற்றும் உற்பத்தி தளத்தை சென்னையில் அமைத்து ஐபோன் உள்ளிட்ட மின்சாத பொருள்களை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தைவான் நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் ஐபோன், ஐ-பேட் உள்ளிட்ட பல்வேறு மின்சாதனைப் பொருள்களை உற்பத்தி செய்து அமெரிக்கா, கனடா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வருகிறது.
இந்த நிறுவனம் இந்தியாவில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் தனது தொழிற்சாலையை அமைத்து நடத்தி வருகிறது. இதனிடையே இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக சுற்றுச் சூழல் அனுமதி கோரி பாக்ஸ்கான் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசுடன் பாக்ஸ்கான் நிறுவனம் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்ஸ்கான் நிறுவனம் சிங்கப்பூர் கிளை மூலம் ஐந்தே நாட்களில் ரூ.12,800 கோடி கூடுதல் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவுக்கு சப்ளை செய்யும் ஐபோன்களின் உற்பத்தி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தி அதிகரிப்பால் பாக்ஸ்கான் நிறுவன லாபம் 2 மடங்காக அதிகரித்து 2025ல் ரூ.1.7 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்காக பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ஐபோன்களை தயாரிக்கிறது குறிப்பிடத்தக்கது.