நேற்று புனேவில் IPL 2016இன் 20வது போட்டி புனே சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி புனே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
ரஹானே மற்றும் ஸ்மித் புனே அணி துவக்க ஆட்டகரர்களாக களமிரங்கி 12 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் எடுத்தனர். சதீஷ் வீசிய பந்தில் ஸ்மித் ரன் அவுட் அனார். ரஹானே இந்த தருவாயில் தனது அரைசதம் கடந்து சுனில் நரைன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் . தோனி கடைசி ஓவர்களில் தனது அதிரடி ஆட்டம் மூலம் புனே அணியின் ஸ்கோர் 160 ரன்கள் 20 ஓவர்கள் முடிவில் எடுத்தனர்.
கொல்கத்தா 161 ரன்கள் வெற்றி பெற எடுக்க வேண்டிய நிலையில் கம்பீர் மற்றும் உத்தப்பா துவக்க ஆட்டகரர்களாக களமிரங்கி சொற்ப ரன்களுக்கு அவுட் செயபட்டனர். சூர்யா குமார் மற்றும் பதான் ஜோடி கொல்கத்தா அணி வெற்றி பெற வலுவான பேட்டிங் செய்தனர். அங்கிட் படேல் மற்றும் ராஜத் பாட்டிய இருவருரின் பந்து
வீச்சின் மூலம் போட்டி யாருக்கும் வெற்றி தரும் என்ற சமமாக நிலையில் இருந்தது. கொல்கத்தா வீரர்கள் சதீஷ் மற்றும் ரஸ்ஸல் அதிரடி சிக்ஸர்கள் அடிக்க கொல்கத்தா வெற்றி பெற்றது. புனே தங்களது முன்னி பௌலர் ரவிச்சந்திரன் அஷ்வினை முழுமையாக பயன்படுத்தாதது இந்த தொடர் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
கொல்கத்தா 162/8 (சூர்யா குமார் 60, பதான் 36, ராஜத் பாட்டிய 2/19) புனே 160/5 (ரஹானே 67, ஸ்மித் 31, தோனி 23)
Patrikai.com official YouTube Channel