குஜராத்: குஜராத் மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வதோதரா மற்றும் ஆனந்தை இணைக்கும் கம்பீரா பாலம் இடிந்து விழுந்தது, அதிக மழை காரணமாக, இந்த பழைய பாலத்திற்கு பதிலாக  புதிய பாலம் கட்ட மாநில அரசு 3 மாதங்களுக்கு முன்பு ரூ.212 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பாலம் இன்று காலை இடிந்து விழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில்,  வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது உள்ள காம்பிரா பாலம்  திடீரென  இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் மற்றும் லாரிஉள்பட வாகனங்கள்  ஆற்றுக்குள் விழுந்த நிலையில், அதில் பயணம் செய்தவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமுடன் மீட்கப்பட்டள்ளனர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

40ஆண்டுகள் பழமையான காம்பிரா பாலம்,  அங்குள்ள மஹிசாகர் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ளது. இது . குஜராத்தின் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும்  வகையில் உள்ளது. இந்த பாலத்தில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில்,  இந்த பாலம் . இன்று காலை 7.30 மணியளவில் தீடீரென இடித்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நடைபெற்றுக்கொண்டிருந்போது, பாலத்தின்மீது ஏராளமான வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், பாலம் இடிந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்னத. அதன்படி,  2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர் என அனைத்து தரப்பினரும் அதிரடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து,   விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை  9 பேர்  சடலங்களாக  மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேர்  காயடங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன,. பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இநத் விபத்து குறித்து மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காவல்துறையினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய   குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் பேசுகையில், இந்த பாலம் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும், அதன் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை விசாரிக்க தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்ப முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார் என்றார்.