டெல்லி: முன்னாள் மத்தியஅமைச்சர் ரகுவன் பிரசாத் சிங் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் பணியாற்றிய லாலு கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்தியமந்திரி ரகுவன்ஷ் பிரசாத்சிங் ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பில்இருந்து குணமடைந்த நிலையில், அதற்கு பிந்தைய இணை நோயினால் பாதிக்கப்பட்டார்.
இதனால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலை யில், வென்டிலேட்டரில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்து உள்ளது.
ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதியே கட்சியில் இருந்து விலகுவதாக அவா் அறிவித்தாா். எனினும், கட்சியின் தலைவா் லாலு பிரசாத் யாதவ் கேட்டுக் கொண்டதால் அவா் கட்சியில் நீடித்தாா். இந்நிலையில், கொரோனா பாதிப்பின் இணை நோய் தாக்குதல் காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை, கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக ரகுவன்ஷ் பிரசாத் அறிவித்திருந்தார்.
அப்போது, தான், பொதுமக்கள், கட்சித்தலைவா்கள், தொண்டா்கள் ஆகியோரின் நல்லாசிகளைப் பெற்றிருந் தேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.
லாலுவின் மகன் தேஜஸ்வியாதவின் தலைமையில் கட்சியின் செயல்பாடு ரகுவன்ஷ் பிரசாத்துக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் எதிா்வரும் நிலையில், இது லாலு கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
ரகுவன்பிரசாத் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் அரசில் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். 5 முறை எம்.பி. பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.