டெல்லி:

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியதற்காக முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மன்னிப்பு கோரினார்.

 

ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சமூகவலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது அவரது வழக்கம். அந்த வரிசையில் நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் நடைமுறை தொடர்பாக சர்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.

இதனால் அதிருப்தியடைந்த சுப்ரீம்கோர்ட் தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம்கோர்ட்டில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கட்ஜு சார்பில் அவரது வக்கீல் ராஜீவ் தவான் மன்னிப்பு கடிதத்தை தாக்கல் செய்தார்.
கட்ஜுவின் மன்னிப்பே ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் யூ.யூ.லலித் ஆகிய இருவரும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.