டில்லி:

ஞ்ச குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது தொடரப்பட்டுள்ள வழக்கில்,  3வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம்  டில்லி உயர்நீதி மன்றம் கெடு விதித்துள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் மீதான வழக்கு தொடர்பாக  சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, இடைத்தரகர் ஒருவர் மூலம் ரூ.  2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார் தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு சிபிஐ சிறப்பு இயக்குனர்  அஸ்தானா, துணை கண்காணிப்பு அதிகாரி  தேவேந்திரகுமார், மனோஜ் பிரசாத் உள்பட 4 பேர் மீது கிரிமினல்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு இன்று   மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, அஸ்தானா மீதான வழக்கை நீதிமன்றம் கண்காணித்து வருவதாக கூறிய நீதிபதிகள், விசாரணை தாமதமானதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு குறித்து 3 வாரங்களுக் குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால், சிபிஐ துணை இயக்குனர்  ஆர்.கே.சுக்லா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.