தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் சிறையில் தற்கொலை முயற்சி…

தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் இராணுவச் சட்டம் தொடர்பான அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து நீதித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தென்கொரிய அதிபர் யூன் சுக் கடந்த வாரம் அவசர நிலை பிரகடனப் படுத்தியதுடன் இராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாகத் அறிவித்தார்.

இதில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் பங்கு குறித்த விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிம் தனது உள்ளாடைகளைப் பயன்படுத்தி சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்த காவலர்கள் அதைத் தடுத்தனர்.

அதேவேளையில் தென் கொரியப் போலீசார் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.