காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா  நேற்று முன்தினம் (மார்ச் 26) ஏ ற்ற 36 மணி நேரத்தில் முன்னாள் பிரதமர் ஒலியை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 2025ம் ஆண்டு நேபாளத்தில்  நடைபெற்ற’Gen Z’ போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது செய்யப்பட்டு உள்ளார். இன்று அதிகாலை  காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பாலேந்திர ஷா நேபாளத்தின் 47வது பிரதமராக 35 வயதில் பதவியேற்றார்.

நேபாளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற’Gen Z’ போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை காவல்துறை கைது செய்த‌து. புதிதாக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா அரசு, விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று அதிகாலை அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, நேபாளத்தில் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற 36 மணிநேரத்திற்குள் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது சுமார் 77 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக முன்னாள் பிரதமர் ஒலி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதே வழக்கில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லேக்காக் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தின் தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள பாலேந்திர ஷா, 2022-ல் நேபாள் தலைநகர்  காத்மாண்டுவில் சுயேச்சை வேட்பாளராக மேயர் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்றார். இதன்முலம் அவரது அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில்  ல் முக்கியத்துவம் பெற்றார்; நகர்ப்புற மேம்பாடு மற்றும் ஆளுகை சீர்திருத்தங்களில் அவர் காட்டிய கவனத்திற்காக அங்கீகாரம் பெற்றார். தற்போது அவர் பிரதமராக  பதவி ஏற்றுள்ளார்.

1990-ல் காத்மாண்டுவில் பிறந்த அவர், விஸ்வேஸ்வராயா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் முதுகலைப் பட்டம் உட்பட, பொறியியலில் உயர் கல்வி பயின்றார். உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுச் சவால்களை எதிர்கொள்வதில் அவரது தொழில்நுட்பப் பின்னணி ஒரு சொத்தாகக் கருதப்படுகிறது.

சீர்திருத்தத்தையும் மாற்றத்தையும் உறுதியளிக்கும் ஒரு புதிய தலைமுறையை நோக்கி, நிலைபெற்ற தலைமையிலிருந்து விலகிச் செல்லும் ஒரு போக்கைப் பிரதிபலிக்கும் வகையில், அவரது பிரதமர் நியமனம் நேபாள அரசியலில் ஒரு திருப்புமுனையாகப் பரவலாகக் கருதப்படுகிறது.

[youtube-feed feed=1]