உலகின் மிகச்சிறந்த பொருளாதார மேதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் இன்று காலமானார்.

கடந்த ஓராண்டாக உடல்நிலை நலிவுற்றிருந்த மன்மோகன் சிங் உடல்நிலை இன்று மிகவும் மோசமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி