இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார். இதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

80வயதான மம்னூன் உசேன் வயது முதிர்வு காரணமாக உடல்ரநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்று இரவு காலமானதாக அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் தெரவித்துள்ளனர்.

1940 இல் ஆக்ராவில் பிறந்து 1947 இல் தனது பெற்றோருடன் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர் உசைன். பாக்கிஸ்தானின் மூத்த முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) தலைவராக இருந்து வருகிறார்.

இவர் அந்நாட்டின் 12வது ஜனாதிபதியாக  கடந்த செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2018 வரை பணியாற்றி உள்ளார்.

இவருக்கு கடந்த ஆண்டு புற்றுநோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும்,அதையடுத்து,அவரது உயிர் பிரிந்ததாகவும்,  பி.எம்.எல் கட்சியின்  கூடுதல் பொதுச் ‘செயலாளர் சவுத்ரி தாரிக் கூறியுள்ளார்.