சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ் வழங்கி உள்ளது.

தேசிய பங்கு சந்தையின் தலைவராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அனந்த சுப்பிரமணியம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவ்லகள் வெளியானது.

இந்த நிலையில், பங்குச் சந்தையின் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான வழக்கில் ₹ 3.12 கோடி செலுத்துமாறு தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு இந்திய மூலதனச் சந்தை ஒழுங்குமுறைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நேற்று (செவ்வாய்கிழமை)  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. ரூ.3.12 கோடியை 15 நாட்களில் செலுத்த தவறினால்  அவரது வங்கி கணக்குகள்,  சொத்துகள் முடக்கப்படும் என செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே முறைகேடு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.  3 கோடி அபராதம்  கட்ட செபி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை அவர் செலுத்த தவறிய நிலையில், புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளத. அதில்,  15 நாட்களுக்குள் வட்டி மற்றும் மீட்புச் செலவு உட்பட ₹ 3.12 கோடியை செலுத்துமாறு  உத்தரவிட்டுள்ளது. இந்த 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாத பட்சத்தில், அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் என்றும், அசையும், அசையா சொத்துக்களை  இணைத்து விற்பதன் மூலம் இழப்பீட்டை சந்தை கட்டுப்பாட்டாளர் தொகையை மீட்டெடுப்பார் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.