புதுடெல்லி:
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி கைசர் ஜஹானும் அவரது கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜாஸ்மிர் அன்சாரியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.
மேற்கு உத்திரப் பிரதேச பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டதையடுத்து, அம்மாநில அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தொண்டர்கள் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.
பிரியங்கா காந்தி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை உத்திரப்பிரதேசத்தில் அனைத்து கட்சிகளையும் கலங்கடித்து வருகிறது. இந்நிலையில்,பாஜக எம்பி, எம்ல்ஏக்கள் என தொடர்ந்து காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்முறையாக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி கைசர் ஜஹானும், அவரது கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜாஸ்மிர் அன்சாரியும் பிரியங்கா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
அவர்களை வரவேற்ற பிரியங்கா காந்தி, காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.