டில்லி:
மும்மொழிக் கொள்கை குறித்து மத்தியஅரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை, தற்போது வரைவு அறிக்கை மட்டுமே வெளியாகி உள்ளது என்று மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவு அறிக்கையை மோடி அரசு பதவி ஏற்றதும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியளால வெளியிட்டார். அதில் இந்தியை திணிக்கும் வகையில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் மும்மொழி கொள்கை குறித்த பொது மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னர்தான் மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறி உள்ளார்.
மேலும், எந்த மொழியையும் திணிக்கும் எண்ணமும் மத்தியஅரசுக்கு இல்லை என்று கூறியவர், அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும் விளக்கமளித்துள்ளார்.