புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஊரக வளர்ச்சித்துறை செயலாளரின் உதவியாளர் முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய சோதனையில், அவருக்கு ரூ.16 கோடி சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது. nkY;k. 83 சவரன் தங்க நகை, மூன்றரை கிலோ வெள்ளி மற்றும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்துவந்தவர்,

திமுக ஆட்சிக்கு வந்ததும், இவர் அங்கிருந்து மாற்றப்பட்டு, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிந்துவருகிறார். இவருடைய மனைவி காந்திமதி முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார்.

அரசு ஊழியரான முருகானந்தமும், இவரின் மனைவி காந்திமதி வருமானத்துக்கு அதிகமாக 100 சதவிகிதம், அதாவது ரூ.15 கோடி வரையிலும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதுக்கோட்டை சார்லஸ் நகரிலுள்ள முருகானந்தத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

எஸ்.பி. இமயவர்மன் தலைமையில் திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். 15 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 83 சவரன் தங்க நகைகள், மூன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.