ஐதராபாத்: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாணிக்யாலா ராவ் கொரோனாவால் இன்று காலமானார்.
59 வயதான அவருக்கு கடந்த மாதம் பரிசோதனை செய்தபோது, கொரோனா இருப்பது உறுதியானது. தொடக்கத்தில் எலுருவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட ஒரு வாரத்திற்கு முன்பு விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் .
அவரது மறைவு குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இறுதி சடங்குகள் முழு மரியாதைகளுடன் செய்யப்பட வேண்டும் என்று மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி உள்ளார்.