சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத் தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
ஏற்கனவே ஆஞ்சியோ செய்யப்பட்ட சீனிவாசனுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளார். இருந்தாலும், அப்போலோ அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியிடுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]