இம்பால்: இந்தியாவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் டின்ங்கோ சிங், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு மாதம் இம்பால் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில், இவருக்கு நெகடிவ் என்ற முடிவு வந்துள்ளது. இதனையடுத்து, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட டிங்கே சிங், அங்கு 15 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்.
தற்போது 41 வயதாகும் டின்ங்கோ சிங், கடந்த 1998ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அர்ஜூனா மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றுள்ளார். இவருக்கு கல்லீரல் புற்றுநோய் பிரச்சினையும் இருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்காக சிகிச்சை மேற்கொண்டுவந்தார். அதனையடுத்து குணமானதாக தற்போது தெரியவந்துள்ளது.
“எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் & செவிலியர்களுக்கு நான் நன்றி சொல்லப் போவதில்லை. ஏனெனில், நான் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடன்பட்டுள்ளேன்” என்றுள்ளார் டின்ங்கோ சிங்.