அகமதாபாத் நகரில் இன்று பிற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா AI 171 விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1:39 மணிக்கு புறப்பட்டது.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீ பிடித்ததில் அதில் பயணம் செய்த 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என மொத்தம் 242 பேரின் நிலை கேள்விக்குறியானது.

இதனைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் விமானத்தில் இருந்தவர்களை தேடும் பணி நடைபெற்றது.

இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணம் செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்த நிலையில், விமான விபத்தில் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.