பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் நிகோலஸ் சார்கோசியை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு மறைந்த லிபியான் தலைவர் முமார் காதாபியிடம் இருந்து சட்டவிரோதமாக லட்சக் கணக்கில் பணம் வாங்கிய குற்றச்சாட்டுக்கள் மீது நிகோலஸை நான்திரே போலீசார் மேற்கு பாரீஸில் வைத்து இன்று கைது செய்தனர்.

இவரும், இவரது முன்னாள் தலைமை பணியாளரான கிளவுடே கியான்ட் ஆகியோர் இணைந்து 2007ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெற்றி பெறுவதற்காக பணம் கொடுத்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 2013ம் ஆண்டு முதல் விசாரணை நடந்து வருகிறது.

3 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் மற்றும் லிபானிய தொழிலதிபர் ஜியாத் டேக்கிடினே ஒரு ஆன்லைன் புலனாய்வு தளத்திற்கு ஒரு தகவல் அளித்திருந்தார். அதில் ஒரு சூட்கேஸில் வைத்து 50 லட்சம் யூரோவை ரொக்கமாக நிகோலஸ் சார்கோசி மற்றும் கிளவுடே கியான்ட் ஆகியோரிம் வழங்கியதாக தெரிவித்தார்.

இந்த வகையில் 2007ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தக்கு காதாபி 5 கோடி யூரோ வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த சமயம் 2.10 கோடி யூரோ மட்டுமே தேர்தல் பிரச்சார செலவு செய்ய அளவீடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கூடுதல் பணம் செலவு செய்தது பிரான்ஸின் வெளிநாட்டு நிதியளிப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.

மேலும் சட்ட பிரச்னைகளை இவர் சந்திப்பது இது முதன் முறை கிடையாது. 2016ம் ஆண்ட பிப்ரவரியில் பிரான்ஸின் மாஜிஸ்திரேட்டின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானார். 2012ம் ஆண்டு நடந்த மறு தேர்தல பிரச்சாரத்தில் இவர் கூடுதல் செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.