டெல்லி:
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஏர் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தியது.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, ஏர் இந்தியாவுக்கு விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போதைய ஆட்சியின் போது விமானத்துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல் பதவி இருந்தார்.. அப்போது ‘ஏர் இந்தியா’ விமானத்துக்கு ‘ஏர் பஸ்கள்’ வாங்கியதில் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. மேலும், சர்வதேச விமானங்களை நிறுத்துவதற்கு போதிய இடங்களை ஒதுக்குவதிலும் முறைகேடு நடந்ததாகவும், இதனால் ‘ஏர் இந்தியா’வுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் புகார்கள் அளிக்கப்பட்டன.
இதுகறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது. இதுகுறித்து பிரபுல் பட்டேலிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்ற நிலையில், அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த முடிவு செய்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதையடுத்து, நேற்று அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் சுமார் 6 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.