அரியலுர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி.யான சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ளது.
திமுக சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்து வரும் முன்னாள் எம்.பி. சிவசுப்பிர மணியன், வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவர் 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும்,1989 ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 1971 முதல் 1976 ஆண்டிலும் 1986 முதல் 1990, ஆண்டிலும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக கூறப்படும் சிவசுப்பிரமணியன் மறைவு திமுகவினரிடம் அதிர்ச்சசியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் அரியலூரில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திமுகவினர், அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.