17 மாதங்கள் விசாரணையின்றி சிறையில் இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட மனிஷ் சிசோடியா-வுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விடுதலையானார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், அவரை வரவேற்க ஏராளமான கட்சி தொண்டர்கள் வெளியில் திரண்டனர்.

திகார் சிறையில் இருந்து வெளியே வந்த சில நிமிடங்களில், பாபாசாகேப் அம்பேத்கருக்கு நன்றி தெரிவித்த சிசோடியா, ஒரு சர்வாதிகார அரசாங்கம் ஒரு நிரபராதியை சிறையில் அடைத்தால், அரசியலமைப்புச் சட்டம் அவரைப் பாதுகாக்கும் என்று பாபா சாகேப் அப்போதே முடிவு செய்ததாகக் கூறினார்.