டில்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். காம்பீர் டில்லி நாடாளுமன்ற தொகுதியில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கவுதம் காம்பீர் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக சேருவார் என தகவல்கள் பரவி வந்தது. தற்போது காம்பீர் பாஜகவில் சேர்ந்து, வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் காம்பிர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், கவுதம் காம்பீர் இன்று டில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்க வந்து பாஜக தலைவர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில், பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்தினர். பாஜக தலைவர் அமித்ஷா அவருக்கு பாஜக துண்டு அணிவித்து கவுரவித்தார். நிதி மந்திரி அருண் ஜெட்லி பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிம் பேசிய காம்பீர், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்ததாகவும், பாஜகவுக்காக பணியாற்றுவதில் தனக்கு பெருமை என்றும் தெரிவித்தார்.
காம்பீர் டில்லி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.