நடிகை கஸ்தூரியை நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பால பாரதி தெரிவித்துள்ளார்.
தெலுங்கர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய நடிகை கஸ்தூரி கைதுக்கு பயந்து தலைமறைவான நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவும் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை அமைத்து அவரை தேடிவந்த தமிழக போலீசார் ஹைதராபாத்தில் இருந்த கஸ்தூரியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை இம்மாதம் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “நடிகர் கஸ்தூரி அவர்களின் கருத்தையும் பேச்சையும் ஏற்கவில்லை. கடுமையான கண்டனத்திற்குறியது. இவ்வாறான பேச்சுகளை தவிர்க்கவேண்டும்.
ஆனால் கைது நடவடிக்கை புழல் சிறையில் அடைத்திருப்பது கூடுதல். நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேவேளையில், சர்ச்சைக்குரிய கருத்தை கூறிவிட்டு முன்ஜாமீன் கேட்டு மனு அளித்துவிட்டு சென்னையில் இருந்து மாயமானதன் காரணமாகவே அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.