கொல்கத்தா:
57 ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 1 ரூபாய் டாக்டர் சுஷோவன் பானர்ஜி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் போல்பூரை சேர்ந்த என்ற டாக்டர் சுஷோவன் பானர்ஜி. இவரது மருத்துவப் பணிக்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். சுமார் 57 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வரும் இவர் 20லட்சத்தக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
சிகிச்சைக்காக இவர் வாங்கும் கட்டணம் ரூ.1 மட்டுமே. இதனால், மக்களிடையே ஒரு ரூபாய் டாக்டர் என்று புகழ் பெற்றார். ஏழை நோயாளிகள், அவரை வாழும் கடவுளாக பார்த்து வருகின்றனர்.
தனது வாழ்நாளில் அதிகமான நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்ததற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
சுஷோவன் பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரியில் இளநிலை மருத்துவ பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மருத்துவ பட்டமும் பெற்றார். அப்போது பல்கலைக்கழகத்தில் முதல் மாணவரான வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வாங்கினார். பின்னர் லண்டன் சென்று பல்வேறு மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்து, டிப்ளமா பெற்றுள்ளார்.
இவர் கடந்த 1984-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு,, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்று மக்கள் பணியாற்றியும் உள்ளார்.
கின்னஸ் சாதனை கிடைத்தது குறித்து கருத்த தெரிவித்துள்ள டாக்டர் சுஷோவன் பானர்ஜி, ‘’இந்த கவுரவம், இன்னும் நிறைய நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் உத்வேகத்தை அளிக்கிறது. முதுமை காரணமாக முன்புபோல் என்னால் நடமாட முடியவில்லை. ஏழை நோயாளிகளால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடிந்தது. அதனால் அவர்களுக்கே இந்த கவுரவத்தை அர்ப்பணிக்கிறேன்” என்று பெருமிதமாக கூறியுள்ளார்.