பாட்னா: பீகார் சட்டசபையின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சதானந்த் சிங் காலமானார்.
“பீகாரின் புகழ்பெற்ற தலைவரும், காங்கிரசின் வீரருமான சதானந்த் சிங் ஜி இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிப்பு காரணமாக இருந்து வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.
பீகார் மாநிலத்தின் பாகல்பூரின் கஹல்கான் தொகுதி சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஒன்பது முறை எம்எல்ஏவாகி சாதனை படைத்தவர் சதானந்த்சிங். காங்கிரசின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும் இருந்தார். மூத்த காங்கிரஸ் தலைவரா சதானந்த் சிங் மறைவுக்கு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பீகார் காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா, சதானந்த் சிங்கின் மறைவை ‘ஒரு அரசியல் சகாப்தத்தின் முடிவு’, உங்கள் சிரித்த முகம் எப்போதும் நினைவில் இருக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.