சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

அதிமுக போதுச்செயாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார்.
அண்மைக் காலமாக தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு தொடர்ந்து பல முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதையடுத்து, அவருக்கு உயரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என விடுக்கப்பட்டதால் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை வைத்திருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு மாநில எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதுகாப்பு கருதி இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளத.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தொகுதிவாரியாக பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு உள்ளது. அதனப்டி, அடுத்த வாரம் அவரது சுற்றுப்பயணம் தொடங்குகிறது. இதையொட்டி, தற்போது அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.