காபூல்:

ஆப்கானிஸ்தானில் ஷித்தே ஹஜாரா தலைவர் அப்துல் அலி மஜாரியாவின் 24-வது நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சியின் போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

கடந்த வியாழன்று நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது, முன்னாள் அதிபர் ஹமித் கர்ஜாய் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் இருந்தனர். குண்டு சத்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

18 ஆண்டு பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், கத்தாரில் அமெரிக்காவும் தாலிபானும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக காபூலில் கடந்த ஜனவரியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதற்கு தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.