டெல்லி: முன்னாள் பிசிஐ டைரக்டர் ராகேஷ் அஸ்தானா, எல்லை பாதுகாப்பு படையின் புதிய இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2018ம்ஆண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஐதராபாத் தொழிலதிபர் சதீஷ் சனாவிம் சிபிஐ அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம். இந்தியாவின் பெருமைமிக்க புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குனர்களான அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையே லஞ்சம் புகார் தொடர்பாக பிரச்சினை அம்பலமாகி சிபிஐ மீதான மதிப்பை குறையச் செய்தது.
இந்த விவகாரத்தில், இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில்,சிபிஐ அலுவலகத்திலேயே சிபி ரெய்டு நடைபெற்றது. இந்த விவகாரம் வெளியாகி பரபரப்பையும், சிபிஐ மீதான எண்ணத்தையும் அடியோடு நிலைகுலைய செய்தது. இருவரையும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லும்படி மத்திய அரசு பணித்தது.
இதைத்தொடர்ந்து, இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். அவர்மூலம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ராகேஷ் அஸ்தானாவுக்கு எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரலாக பதவி வழங்க அளிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா, எல்லை சார்ந்த விசயங்களில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகத்தின் தலைவரான ராகேஷ் அஸ்தானா எல்லை பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.