நாகர்கோவில்:
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள களியக்காவிளை எஸ்ஐ வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு (பொன்னார்) தொடர்பு உள்ளதாக திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார்.
கடந்த 8ஆம் தேதி காவல் துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வில்சன், கன்னியாகுமரி மாவட்டம் களியக்கா விளை சோதனைச் சாவடியில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் பொன்னார், தமிழகத்தில், திமுக, காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் முகாம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அப்பாவு, எஸ்.ஐ வில்சன் கொலைக்கும் பொன்னாருக்கும் சம்பந்தம் உள்ளது பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார். பொன்னாரின் கனிமவள கொள்ளைக்கு வில்சன் இடையூறாக இருந்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ.வில்சன் அவர்களின் கொலையில் திமுக கூட்டணிக்கு தொடர்பிருப்பதாக பொன்னார் கூறி வருகிறார். மதிப்பிற்குரிய பொன்னார் அவர்களே! நீங்கள் மத்திய அமைச்சராக இருந்த கடந்த ஐந்து வருடங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சிசிடிவி காமிராக்கள் இயங்கவே இல்லையே , இதற்கு காரணம் நீங்களும், நீங்கள் செய்யும் போலி எம்சாண்ட் மணல் கடத்தல் தொழிலும்தானே?
இப்போது கூட கேரளாவில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தே கொலையாளிகளை தேடி வருகின்றனர்? ஐந்து வருடங்களாக மத்திய இணை அமைச்சராக இருந்தபோது சிசிடிவி காமிரா இயங்காமல் தடுத்து வைத்தகாரணம் என்ன? உங்களுக்கு தினமும் 500 லாரிகளில் போலி எம்.சாண்ட் மணல் திருட்டுத்தனமாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதன் காரணமாகத்தானே, ஐந்து வருடங்களா சிசிடிவி காமிராக்களை தடுத்து வைத்திருந்தீர்கள்.. நீங்கள் “மணல் கடத்தல் தொழில் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்த எஸ்.ஐ வில்சனை குண்டர்களை வைத்து கொலை செய்துவிட்டு, பழியை வேறு யார் மீதாவது பழி சுமத்தி விட்டு தப்பித்து விடலாம் என்று எண்ணி விடாதீர்கள்….
“தமிழக காவல்துறை நேர்மையான முறையில் பொன்னாரையும், அவரது கூட்டாளிகளையும் விசாரித்தால், இந்த கொலையில் பின்னணியில் இருப்பது பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளும் என்பது வெட்ட வெளிச்சமாகும்..
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இத்துடன் ஏற்கனவே பொன்னாரின் ஊழல் குறித்து வெளியான செய்திகளின் இணைப்பையும் கொடுத்துள்ளார்.