கொல்கத்தா: மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா காலமானார். அவருக்கு வயது 90.  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த பட்டாச்சார்யாக இன்று அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த  2000ம் ஆண்டு நவம்பர்  மே 2011 வரை முதலமைச்சராகப் பணியாற்றியவர் புத்ததேப்  பட்டாச்சார்யா. இவர் வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, தெற்கு கொல்கத்தாவின் பாலிகுங்கே பகுதியில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு சிறிய  அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.  இவர்,  நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு  சுவாசிக்க சிரமப்பட்டு வந்தார். இதனால், தனது சுவாச பிரச்சினைக்கு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்ததுடன், , கடந்த சில ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வந்தார்.   அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு CPI(M) பேரணிக்கு சென்றபோது வெளியில் காணப்பட்டார், ஆனால் தூசி ஒவ்வாமை காரணமாக மூச்சிறைப்பு ஏற்பட்டால், நிகழ்ச்சியில்  கலந்து கொள்ள முடியாமல் வீடு திரும்பினார். பின்னர் கடந்த ஆண்டு (2023) மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்த நிலையில், இன்று காலை (08-08-24) புத்ததேப் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில்  காலமானார்.  இதை அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.  புத்ததேப் பட்டாச்சார்யாவுக்கு 80 வயதான அவருக்கு மீரா என்ற மனைவியும் சுசேதனா என்ற மகளும் உள்ளனர்.