முன்னாள் விமானப்படை தளபதி அர்ஜன் சிங் மரணம்!!

Must read

டில்லி:

ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் விமானப்படை மார்ஷல் அர்ஜன்சிங் இன்று இரவு காலமானார்.

முன்னாள் விமானப்படை தளபதி அர்ஜன் சிங் இன்று – காலை மாரடைப்பு காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பிரதமர் மோடி, ராணுவ அமைச்சரர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் இன்று இரவு 7.45 மணியளவில் அவர் இறந்தார்.

பணிகாலத்தில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் ஏர் மார்ஷல் என்ற பெருமை பெற்றார். 2016-ம் ஆண்டு தனது 97 வயது வயதில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பனாக்கர் விமான படை தளத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

More articles

Latest article